லிங்காவுக்கு தடை விதிக்க முடியாது! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: லிங்கா படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ரஜினி-அனுஷ்கா-சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகியுள்ள ‘லிங்கா' படம் வரும் டிசம்பர் 12-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலாஜி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், தெலுங்கு மொழியில் நடிகர்கள் சிரஞ்சீவி, சோனாலி பிந்த்ரே உள்பட பலர் நடித்த ‘இந்திரா' படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளேன். இந்த படத்தின் கதையும், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா' படத்தின் கதையும் ஒன்றுபோல் உள்ளது.
‘இந்திரா' படத்தின் கதையை அப்படியே எடுத்து ‘லிங்கா' படத்தை எடுத்துள்ளனர். எனவே, ‘லிங்கா' படம் வெளியானால் எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்திரா மற்றும் லிங்கா படங்களை பார்த்து கதை குறித்து முடிவு செய்ய வக்கீல் கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "லிங்கா படத்தின் இயக்குனர் பணியை மட்டுமே செய்துள்ளேன். தெலுங்கில் வெளியான இந்திரா படத்தின் கதைக்கும் லிங்கா படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியாவில் உள்ள அணைகள் குறித்து திரைப்படம் எடுக்க எல்லாருக்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமென்றாலும் கதை மற்றும் திரைக்கதையை எழுதலாம்.
இந்த வழக்கை தொடர்வதன் மூலம், லிங்கா படத்தில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டும் விதமான நடவடிக்கையில் மனுதாரர் இறங்கியுள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்," என்று கூறியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுப்பையா, லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications