Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளையாட்டு நிகழ்வுகளில் மதுபான விநியோகம்..சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது சிறப்பு உரிமம், உரிமம் பெற்றவர் மற்றும் உரிமதாரரால் குறிப்பிடப்பட்ட இடத்தில் பொது நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

HC grants interim stay on amendment to act to grant license to serve liquor at international seminars, sporting events

சிறப்பு உரிமம் குறித்த அறிவிப்பு கடந்த 2023 மார்ச் மாதம் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் இயங்குவதில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இதை சரி செய்யாமல் சிறப்பு உரிமத்துடன் திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள் போன்றவற்றில் மது பரிமாற அனுமதி வழங்கப்படுவது பொதுமக்களுக்கு அதிக இடையூறை ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சியினர் விமர்சித்தனர்.

திருமண மண்டபங்கள், விளையாட்டுத் திடல்களில், மதுபானம் அருந்த அனுமதியளிப்பது பொது அமைதியை சீர் குலைத்து, குற்றச் செயல்களை அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். அதாவது, "மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.

மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி" என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

HC grants interim stay on amendment to act to grant license to serve liquor at international seminars, sporting events

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து 'வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர்' வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் தான் அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளது.

இந்நிலையில், திருமணம் போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் என்பதால் இந்த விதிகளை அனுமதித்தால் அது பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்கச் செய்யும் என கூறப்பட்டிருந்தது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருத்த விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, "பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை எதிர்த்துதான் வழக்கு தொடர முடியும்" என தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார்.

ஆனால், பொது இடங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்கவும் தடை விதிக்க கோரியுள்ளோம் எனவும், புதிய திருத்தம் தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்வதாக பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டும், தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+