நடிகை நந்தினி கணவர் மரணம் - தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு

நடிகை நந்தினி கணவர் மரண வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நந்தினி கணவர் மரண வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகையான நந்தினியின் கணவர் கார்த்திக், கடந்த ஏப்ரல் மாதம் விருகம்பாக்கம் லாட்ஜ் ஒன்றில் உயிரிழந்து கிடந்தார். தற்கொலை செய்யும் முன்பு இந்த முடிவை தான் எடுக்க தனது மாமனார் ராஜேந்திரன் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

HC orders to probe Nandhini husband case

தன் மகன் தற்கொலை செய்து கொள்ள அவரின் மாமனார் ராஜேந்திரன் மற்றும் மனைவி நந்தினியின் டார்ச்சரே காரணம் என கார்த்திக்கின் தாய் சாந்தி போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், கார்த்திக்கின் தாயார் சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தனது மகன் கார்த்திக் மரணம் குறித்த வழக்கு விசாரணை மந்தகதியில் நடந்து வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கார்த்திக் மரண வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+