நம்பிக்கை வாக்கெடுப்பில் மோசடி.. ஸ்டாலின் மனுவிற்கு பதில் அளிக்க முதல்வருக்கு ஹைகோர்ட் உத்தரவு
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுபபு தொடர்பான வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு, கடந்த பிப்ரவரி 18ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் தனபாலிடம் ரகசிய வாககெடுப்பு நடத்த கோரினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் கடும் அமளி நிலவியது. அப்போது அவை காவலர்களால் திமுகவினர் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இதில் ஸ்டாலினின் சட்டை கிழிந்தது. இதனிடையே 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு பெற்று எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இந்த வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரியும் ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முறையிட்டனர். எனினும் பலனில்லை.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் விதிமுறைகள் மீறப்பட்டதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில விசாரணைக்கு வந்தது.
அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு பதில் மனுவை வரும் 13-ஆம் தேதி தாக்கல் செய்வதாக வழக்கறிஞர் கருப்பசாமி தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கை வரும் மே 2,3 ஆகிய தேதிகளில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தி விசாரணை நடத்தபபடும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications