85% இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
85% இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருக்கும் மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. இது தமிழக அரசுப் பள்ளி மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவ மாணவிகள் மத்தியில் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
மேலும், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்துள்ளது. இதனால், மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெறும் நூறு இடங்களை மட்டுமே சிபிஎஸ்இ முறையில் படித்த மாணவர்கள் பிடிக்க முடியும். எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் வழங்கியுள்ளது என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழக மாணவ மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
-
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications