விஜயகாந்த், பிரேமலதா மீதான 14 அவதூறு வழக்குகள் விசாரணைக்கு தடை: ஹைகோர்ட்
சென்னை: விஜயகாந்த், பிரேமலதா மீதான 14 அவதூறு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதி்த்துள்ளது. விஜயகாந்த், பிரேமலதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பொதுக்கூட்டங்கள், பேட்டி, அறிக்கைகள் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை அவதூறாக சித்தரித்து பேசியதாக தமிழ்நாடு முழுவதும் 14 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்தும், பிரேமலதாவும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த 14 கிரிமினல் அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் கடந்த 2012ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக, கடந்த 2012ம் வருடம் நவம்பர் மாதம் 23ம் தேதி அரசு வழக்கறிஞர் குலோத்துங்கன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பல முறை விஜயகாந்த் நேரில் ஆஜராகாத காரணத்தினால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமா பானு உத்தரவிட்டார்.
இதேபோல், கடந்த மாதம் முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்துக்கும், அவரது மனைவி பிரேமலதாவுக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து தடையாணை வாங்கப்பட்டது.
இந்த நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்தும், பிரேமலதாவும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த 14 கிரிமினல் அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications