குள்ளநரிகளை வேட்டையாடி தலை, தோல் விற்பனை- வேலூரில் 2 பேர் கைது
வேலூர்: வேலூர் வனப் பகுதியில் முயல், நரி இறைச்சிகளை வேட்டையாடி புதிய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்ய முயன்ற இருவர் புதன்கிழமையன்று வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன பாதுகாவலர் கலாநிதிக்கு தொடர்ச்சியாக தகவல் வந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் முயல் உள்ளிட்ட வன விலங்கு கறிகள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க வன பாதுகாவலர் கலாநிதி தலைமையில் வனச்சரகர்கள் சுப்பிரமணியன், ராஜா, வன ஊழியர் ஜான் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் வேலூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருவர் முயல் கறி, குள்ள நரித் தோல்களை விற்பனைக்காக பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளதாக வனப் பாதுகாவலர் கலாநிதிக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர் அலுவலர்களுடன் நேரடியாக புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் விசாரித்தார்.
செய்யாறை அடுத்த மோரணம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய இவர்களிடம் இருந்து 3 குள்ள நரிகளின் தோல்கள், தலை, 8 முயல்களின் இறைச்சி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வனப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வேட்டையாடியது தெரியவந்ததை அடுத்து வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளநரிகளின் தோல் நல்ல விலை போவதாகவும், மருந்துக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குள்ளநரிகள் தற்போது அழிந்து வரும் வன விலங்குகளில் ஒன்றாக உள்ளது. இவை அழிக்கப்பட்டு வருவதால் வனப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுபற்றி மாவட்ட வன பாதுகாவலர், "குள்ள நரிகள் எண்ணிக்கை குறைவதால் காட்டுப்பன்றிகள், மான்களின் எண்ணிக்கை அதிகரித்து சம நிலை இல்லாத நிலை ஏற்படுகிறது. குள்ளநரிகள் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தால் அவை காட்டுப் பன்றிகள், மான்களை வேட்டையாடிவிடும். அப்போது வன விலங்குகளின் சம நிலையை உருவாக்கும்.
எனவே வன விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடாமல் இருப்பது நல்லது. அப்படி வேட்டையாடுவது குற்றச்செயல் ஆகும். வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை பிடிக்கும் நடவடிக்கை தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications