"ஃபுல்" போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
நீலகிரி: நீலகிரியில் குடித்துவிட்டு போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக முகமது சலீம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி வேலை நேரங்களில் குடிபோதையில் வருவதால் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மத்தியில் பல பிரச்சனைகள் ஏற்ப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று காலை முகமது சலீம் போதையில் பள்ளிக்கு வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த பெற்றோர், பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்று பகல் 3:00 மணியளவில் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, பள்ளிக்கு வந்த போது, முகமது சலீம் திடீரென அரை நாள் விடுப்பில் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, முகமது சலீம் வீட்டிற்கு சென்ற மாவட்ட கல்வி அலுவலர் அவரை அழைத்து வந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தினார்.
அப்போது, அவர் போதையில் இருந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து, தலைமையாசிரியர் முகமது சலீம் மீது தேவாலா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் உதவியுடன் முகமது சலீம் பந்தலுார் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில், அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முகமது சலீம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications