விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம், சரத்குமாரிடம் 6 மணி நேரம்.. ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை முடிவுற்றது.
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் நடத்திய விசாரணை தற்போது முடிவு பெற்றது. அதேபோல் சரத்குமாரிடம் 6 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட விசாரணை முடிவு பெற்றது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் வினியோகிப்பதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அலுவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது.
இதில் ரூ.89 கோடி வரை ஆர்.கே. நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதுதொடர்பான சோதனை அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது.
இந்நிலையில் மேற்கண்ட 3 பேரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணை அதிகாரியான துணை இயக்குநர் ராஜமாணிக்கம் முன்பு ஆஜரானார். முன்னதாக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரனும் ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாரும் ஆஜரானார். அவர்களிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்துவிட்டது. அதிகாரிகள் துறை ரீதியாக கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் சரத்குமாரிடம் 6 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விசாரணையும் முடிவுற்றது. மேலும் சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையும் முடிவடைந்தது.
வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கீதாலட்சுமி ரிட் தாக்கல் செய்துள்ளதால் அவர் ஆஜராகவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications