சத்தா சாப்பிட்டு ஹெல்தியா இருங்க... காரைக்குடி பள்ளியில் டாக்டர்கள் அட்வைஸ்
சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு காரைக்குடி பள்ளியில் ஊட்டசத்து உணவுப் பொருட்கள் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
காரைக்குடி: காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஊட்டசத்து உணவுப் பொருட்கள் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
காரைக்குடி அப்போலோ மருத்துவமனை நிர்வாக அலுவலர் திருமதி ஏ. லாவண்யா அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
ரோட்டரி கிளப் ஆப் பெர்ல் சங்கமம் பயிற்சியாளர் திரு முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். பொறுப்பு தலைமையாசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளியில் கண்காட்சி
அப்போலோ மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் திரு. சங்கரலிங்கம் அவர்கள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பெர்ல் சங்கமம் பொருளாளர் திரு. தனசேகரன் அவர்கள் கலந்து கொண்டனர்.

காய்கறிகள் உணவு
மாணவர்கள் கண்காட்சியில் பச்சை காய்கறிகளான காரட், பீட்ரூட், வெண்டைகாய், உருளைக்கிழங்கு, கொடைமிளகாய், தக்காளி ஆகியவற்றை காட்சிபடுத்தியும் அவற்றின் பூர்வீகம், அதில் அடங்கிய சத்துக்கள் பற்றி விளக்கினார்கள்.

பழங்களில் அடங்கிய சத்துக்கள்
பப்பாளி, அன்னாசி, கீரணிபழம், தறுகண்பழம், மாதுளம்பழம் போன்ற பழங்களை காட்சிபடுத்தியும் அவற்றில் அடங்கிய சத்துக்கள் பற்றியும் விளக்கினார்கள்.

துரித உணவு வேண்டாம்
காரைக்குடி அப்போலோ மருத்துவமனை நிர்வாக அலுவலர் திருமதி ஏ. லாவண்யா அவர்கள் தனது சிறப்புரையில் மாணவர்கள் சத்தான உணவுகளை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், துரித உணவுகளான பீசா, நூடுல்ஸ், பர்கர் முதலிய உணவுகளை மாணவர்கள் தவிர்க்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பெற்றோர்கள் மகிழ்ச்சி
கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இன்டராக்ட் சங்கத் தலைவர் செல்வன். ஆரோக்கிய கிரிஸ்டோபர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி. மீனாட்சி அவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் செய்திருந்தார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications