அனல் காற்று வீசுதே..... பற்றி எரியும் திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு
திருத்தணியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது. 10 மணியிலேயே 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் அனல் காற்று, பல மாவட்டங்களில் சூறைக்காற்று என தாக்கி வருகிறது. திருத்தணியில் காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது. 10 மணியிலேயே 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல பகுதிகளில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூரில் 110 டிகிரி கொளுத்தியது. மாலை நேரத்தில் திருத்தணியில் மழை பெய்து குளுமையை ஏற்படுத்தியது.

வெயில் மற்றும் வெப்பம் காரணமாக சிவகங்கை, திண்டுக்கல், வாடிப்பட்டி உள்ளிட்ட உள் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதனால் அந்த பகுதியில் சற்று வெப்பம் தணிந்தது.
கடந்த வாரம் முதல் தெற்கு ஆந்திராவில் அனல் காற்று வீசிவருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் சில இடங்களில் நேற்றும் அனல்காற்று வீசியது. இன்றும் காலை முதலே பல மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது.
தெற்கு ஆந்திராவில் அனல் காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் வடமேற்கு மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, கிருஷ்ணிகிரி, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதலே திருத்தணி, வேலூரில் அனல் காற்று வீசுகிறது. காலை முதலே 110 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வெயில் மற்றும் வெப்ப காற்று வீசுவது மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications