தொடர் விடுமுறை எதிரொலி... குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
குற்றாலம்: தொடர் விடுமுறை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அருவிகளின் நகரமாக விளங்குவது நெல்லைமாவட்டம் குற்றாலம் ஆகும். தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3மாதங்கள் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து இருக்கும்.
எனவே, இங்கு குளிப்பதற்கு சுமார் 80இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அருவிகளில் வெள்ளம்...
இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் சீசன் முறையே தொடங்கியதால் அருவிகளில் குளிப்பதற்க்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கியது.தொடர்ந்து கடந்த 70நாட்களில் குற்றாலம், ஐந்தருவிகளில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று பெய்ததின் காரணமாக சுமார் 5முறை அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டது.

தொடர் விடுமுறை...
ஆனால், கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இல்லாததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 13, 14 மற்றும் 15 ஆகிய 3தினங்கள் தொடர் விடுமுறை நாட்களாக அமைந்தது.

சுற்றுலாப் பயணிகள் கூட்டம்...
எனவே, குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்தவண்ணம் உள்ளனர். குற்றாலம் மெயின் அருவியில் குறைந்தளவே விழும் நீரில் பெண்கள் வரிசையில் நின்று குளித்து சென்றவண்ணம் உள்ளனர்.

பாதுகாப்பு இல்லை...
ஆண்கள் பகுதியில் அதிக தண்ணீர் கொட்டுவதால் அவர்கள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். ஐந்தருவியிலும் இதே நிலைதான் உள்ளது.போதிய போலீசார் பாதுகாப்பு இல்லாததால் அருவிக்கரையில் அலைமோதி வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குப்படுத்தமுடியவில்லை.

செயின் பறிப்பு...
இந்நிலையில் காலை குற்றாலம் மெயின் அறிவிப் பகுதியில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த மூதாட்டி மோஸியா என்பவரிடம் திருவாரூரை சார்ந்த கணவன், மனைவி தங்க சங்கிலியை பறிக்க முயன்றபோது பிடிபபட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications