திடீரென நிலை குலைந்த போலீஸ்.. கருணாநிதி உடல் அருகே குவிந்த தொண்டர்கள்.. ராஜாஜி ஹாலில் பரபரப்பு
போலீஸ் கட்டுப்பாட்டை மீறி கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு தொண்டர்கள் சென்றனர்.
Recommended Video

சென்னை: போலீஸ் கட்டுப்பாட்டை மீறி கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு தொண்டர்கள் கூட்டமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருணாநிதியின் உடல் நேற்று காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு கோபாலபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து சிஐடி காலனிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் இன்று அதிகாலை 6 மணிக்கு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உடல் வருவதற்கு முன்பே ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேரம் ஆக ஆக கூட்டம் கூடியது.
வெளியூர்களில் இருந்தும் தொண்டர்கள் குவிந்ததால் போதுமான போலீஸார் இல்லாததால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீஸார் திணறினர்.
இதையடுத்து தொண்டர்கள் கூட்டமாக கருணாநிதி வைக்கப்பட்ட உடல் அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். எனினும் கருணாநிதி அருகே மக்கள் அஞ்சலி செலுத்த திமுக அனுமதித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications