For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரட்டாசி முதல் சனிக்கிழமை... பக்தர்கள் வெள்ளத்தால் திணறிய திருச்செந்தூர்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று மாலை அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் திருச்செந்தூரில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருப்பதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Heavy crowd seen in Tiruchendur temple

அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள புன்னைநகர் வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான மாலை சிறப்பு அள்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாலை 6 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வண்ணம் இருந்தது. திரளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை பக்தர்கள் வசதிக்காக நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், நெல்லை, தூத்துக்குடி, சாத்தான்குளம் வழியாகவும் சிறப்பு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டது. திருச்செந்தூர் செல்லும் வழியில் அதிக அளவில் நவதிருப்பதி கோயில்கள் இருப்பதால் பக்தர்கள் அனைவரும் அனைத்து நவ திருப்பதி கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தினர். சிலர் சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை கார்களில் வந்திருந்தனர்.

புரட்டாசி சனிக்கிழமைக்கான சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் மற்றும் அவரது மகன்கள் சிவகுமார், சரவணன், உதவி பொது மேலாளர் ஆறுமுகம், மூத்த அலுவலர்கள் சீனு உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

English summary
On the auspicious tamil month purattasi Saturday heavy crowd was seen in Tiruchendur murugan temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X