தென் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்
தென் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: தென் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமான சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

தற்போது சென்னையில் வெயில் காட்டத் தொடங்கியுள்ளது. ஆனால் தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவ்ததுள்ளது.
இதேபோல் அந்தமான் நிக்கோபர் தீவுகளிலும் கனமழை கொட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, கேரளா, லக்ஷதீவு ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டெல்லி, வடக்கு ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் நாளை காலையில் கடுமையான பனிமூட்டம் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications