மார்கழியில் ஜில்லென்ற மழை... குடையோடு வெளியே போங்க - எச்சரிக்கும் வானிலை
மார்கழி மாதத்தில் ஜில்லென்ற மழை பெய்கிறது. மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மார்கழி மாதத்தில் குளிர் வாட்டி வதைக்கிறது. கூடவே சாரல் மழையும் போட்டு எடுக்கிறது. காலை முதலே சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னைவாசிகள் ஸ்வெட்டர் போடாமல் வெளியே தலை காட்ட முடியவில்லை.

மார்கழியில் மழைக்குக் காரணம் காற்றழுத்த தாழ்வு நிலைதான் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மன்னார்வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்தார்.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் கடற்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சென்னையில் மேக மூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து விடும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் அதிகபட்சமாக 10 செமீ மழை பெய்துள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications