கர்நாடகத்தால் வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் செம மழை!
வடகிழக்கு பருவ மழை தொடங்கிய முதல் நாளே காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி மழை பெய்யத் தொடங்கிய முதல் நாளே காவிரி டெல்டா பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காலதாமதமானதால் எப்போது இந்த ஆண்டிற்கான மழை பொழியும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 30ம் தேதி பருவ மழை தொடங்கும் என்று அறிவித்தது. அது அறிவித்தபடியே, தீபாவளிக்கு மறுநாள் மழை பெய்யத் தொடங்கியது.

தமிழகம் முழுவதுமே பரவலாக நல்ல மழை பெய்தது. காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சை, நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 4 வரை விடிய விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் திருப்பூந்துருத்தி, கண்டியூர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. திருக்காட்டுப்பள்ளி, குடவாசல், அணைக்கரை, மஞ்சலாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஈசன்விடுதி, வெட்டிக்காடு, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை கொட்டியது.
திருவாரூர் மாவட்டத்திலும் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதேபோல் நாகை மாவட்டத்தில் நள்ளிரவு லேசான மழை பெய்தது. வேதாரண்யம், கொள்ளிடம், பொறையார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த மழையால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த மழை, நடவு செய்த வயலுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications