தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு... சென்னையில் இன்று மாலையும் மழை பெய்யுமாம்!
சென்னை: தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில் அடிப்பதும் மாலையில் மழையும் பெய்வதுமாக உள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலைக்கு மேல் சென்னையின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஆரணி மற்றும் வந்தவாசியில் 8 செமீ மழையும், குறைந்த பட்சமாக மதுராந்தகம், தாம்பரம் ஆகிய இடங்களில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications