அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும்... சென்னையில் அவ்வப்போது மழை இருக்கும்- ரமணன்
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அப்படியே இருக்கிறது. அது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து குமரி அருகே லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு இடையே நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் நல்ல மழை இருக்கும்.
சென்னையில் மேகமூட்டமாக இருக்கும். அவ்வப்போது மழை பெய்யும். உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் அதிகபட்சமாக 13 செமீ மழை பெய்துள்ளது. திருச்சி, சோழவரம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் 6 செமீ மழை பெய்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications