எஸ்.ஆர். ரமணன் கன மழை பெய்யும்னு சொன்னாரு.. மழை நின்னே போச்சு!
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், இதனால் இன்று வட கடலோர மாநிலங்களில் கன மழை பெய்யும் என்றும் நேற்றுதான் எஸ்.ஆர்.ரமணன் கூறியிருந்தார். ஆனால் இன்று படிப்படியாக மழை குறைந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னையில் காலையிலிருந்தே மழையைக் காணோம்.
நேற்று சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறுகையில், வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் வடக்கு இலங்கைக்கும், தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியிலும் நீடிக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வடக்கு நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா மற்றும் ஓடிசாவில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறுமா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்யக்கூடும். தரைக்காற்று வழக்கமாக வீசுவதை விடவும் சற்று பலமாக வீசும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 44 செ.மீ. சராசரியாக பெய்யும். நேற்று வரையிலான நிலவரப்படி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 42.5 செ.மீ. அளவுக்கு பதிவாகி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் பற்றாக்குறையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாளை முதல் மழை குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில், வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து புவனேஸ்வர் நோக்கி செல்கிறது. இதன் காரணமாக தமிழகம் - புதுச்சேரியில் மழை படிப்படியாக குறையும். அதேசமயம் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications