சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை
சென்னை: அசோக்நகர், கிண்டி, சாந்தோம், தேனாம்பேட்டை, மைலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கனமழை பெய்தது.
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மத்திய மேற்கு வங்கக் கடலில் நீடித்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. எனினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. அம்பத்தூர், கோயம்பேடு, அண்ணாநகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
அசோக்நகர், கிண்டி, சாந்தோம், தேனாம்பேட்டை, மைலாப்பூர், ராயப்பேட்டை, தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மேலும், தண்டையார்பேட்டை, புதுவண்ணாரபேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூரில் பரவலாக மழை பெய்தது.












Click it and Unblock the Notifications