சென்னையில் கொட்டித் தீர்த்த மழை... சாலைகளில் வெள்ளம் - 24 மணிநேரத்திற்கு நீடிக்குமாம்!
சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தியாகராய நகர், மயிலாப்பூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் பில்லர், எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டி வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இலங்கை அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்று மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் கன்னியாகுமரி இடையேயான பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகத்தின், கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
இந்த நிலையில் நண்பகல் 12 மணியளவில் இருந்து சென்னையின் நகர்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. தியாகராய நகர், மயிலாப்பூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் பில்லர், எழும்பூர், புரசைவாக்கம், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டி வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இதனிடையே ஓமனில் இருந்து 850 கிமீ தொலைவில் அரபிக்கடலில் உருவாகியுள்ள 'சாப்லா' புயல் வலுவடைந்துள்ளதாகவும், அது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் வரும் 2ம் தேதி ஒமன் நாட்டு கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications