கன மழையால் ஸ்தம்பித்தது சென்னை.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: காற்றழுத்த தாழ்வுமையம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பகுதிகளில் கடும் மழை, காற்று வீசிவருகிறது. பல இடங்களில் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம், புதுச்சேரி அருகே, புயலாக மாறி இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.

சென்னையில் இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. கடுமையான காற்றுடன் மழை பெய்வதால் சென்னையின் பல இடங்களில் காலை முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடலில் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டிணம், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடமுறைவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications