செஞ்சி.. செங்கம்.. திருப்பத்தூர்.. அடித்து தூள் கிளப்பும் கனமழை.. சிலு சிலு காற்றால் மக்கள் குஷி
செங்கம், திருப்பத்தூர், செஞ்சி ஆகிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. என்றாலும் வெப்பச் சலனம் காரணமாக சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இன்று, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது.

காற்றுடன் கனமழை
அக்னி நட்சத்திரம் வாட்டி எடுத்து வரும் வேளையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு
மழையின் போது பலத்தக் காற்று வீசியதால், மின்சார ஓயர்கள் ஆங்காங்கே அறுந்து விழுந்துள்ளன. இதனால் இந்தப் பகுதியில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்னல் இடி
அதே போன்று, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் பூமி குளிர்ந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை
திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. கே.கே. சத்திரம், ராமஞ்சேரி, புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications