நேற்று கொடும் வெயில் காய்ச்சி எடுத்த வட தமிழகத்தில் இன்று மழை கொட்டுமாம்!
சென்னை: வட தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.
வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், "வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஆங்காங்கே ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் உள்பகுதிகளில் பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய கன மழையும் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்பட தென் மாவட்டங்களை பொருத்தமட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று கடும் வெயில் அடித்தது. குறிப்பாக சென்னையில் மிகக் கடுமையான வெப்பம் காணப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications