மகாராஷ்டிராவில் "லோ"... தமிழகத்தில் புயல் காற்றுடன் கன மழை பெய்யும் என எச்சரிக்கை!
சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக தமிழக வான் பகுதியில் காற்றுச் சுழற்சி ஏற்பட்டுள்ளதாம். இதனால் பலத்த புயல் காற்றுடன் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியிலும் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்குப் பருவ மழை கேரளாவில் சூடு பிடித்துள்ளது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் மகாராஷ்டிராவின் கடற்பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கும் மழை கொட்டுகிறது.

வெப்பச் சலனம்- காற்றுச் சுழற்சி
இதன் விளைவாக தமிழக வான் பகுதியில் வெப்பச் சலனமும், காற்றுச் சுழற்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி- சென்னை
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியுள்ளது. அதேபோல சென்னையிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் 10 மில்லி
சென்னையில் நேற்று திடீனெ மாலையில் பலத்த மழை கொட்டியது. 10 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்ததால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது. அதே நேரம் புறநகர்களில் பெரிய அளவில் மழை இல்லை. இரவில் சற்று பெய்தது.

வளிமண்டல மேலடுக்கில் காற்றுச் சுழற்சி
இந்த நிலையில், தற்போது வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது வங்கக் கடல் பகுதியில் இருந்து கேரளா வரை பரவியுள்ளதால் இன்றும் தமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.

சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகியவற்றில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. மேலும், இன்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசும், அதனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications