தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது.

இந்த வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் நேற்று டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.
அதேபோல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும். சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். காவிரியில் வெள்ளம் அதிகமாக செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications