தென்காசி பகுதியில் குளு குளு ஐஸ் கட்டி மழை.. பொது மக்கள் மகிழ்ச்சி
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி: கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து பொதுமக்களை குளிர்வித்தது. மேலும் ஆலங்குளம் பகுதிகளில் ஐஸ்கட்டி மழை பெய்தது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவும் நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் வெயில் சுட்டெரித்து வருகிறது.

கரூர், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அனல் காற்றை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பலத்த மழை பெய்தது. 63 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியது. இதனிடையே இன்று பகலில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, குண்டாறு, ஆலங்குளம் வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலொடு கன மழை பெய்து வருகிறது.
இம்மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தை தாங்க முடியமால் தவித்து வந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. மேலும் ஆலங்குளம் பகுதிகளில் ஐஸ் கட்டி மழை பெய்தது. கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications