தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம்: இன்னும் 2 நாளைக்கு நீடிக்கும்
சென்னை: வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.
வழக்கத்தை விட முன்கூட்டியே இந்த வருடம் பருவமழை தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் பருவ மழை சராசரி அளவை விட கூடுதலாக பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 நாளில் பாதியளவு மழை
வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ மழை கிடைக்கும். ஆனால் பருவமழை தொடங்கி 15 நாளில் 24 செ.மீ மழை கிடைத்துள்ளது. சராசரி அளவை மிஞ்சி ஒரு சில மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்துள்ளது.

மழை அளவு எவ்வளவு
தமிழகம் முழுவதும் பெய்துள்ள மழை அளவு கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரையில் பெய்த மழை அளவை கணக்கிடும் போது 34 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழை 33 சதவீதம் குறைவாக பெய்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பல மாவட்டங்களில் சராசரியாக கிடைக்க வேண்டிய மழை அளவை விட அதிகமாக பெய்து இருக்கிறது.

தென் மாவட்டங்களில் அதிகம்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரியை விட அதிக மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியை விட 25 சதவீதம் மழை அதிகம் பெய்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 103 சதவீதமும், ஈரோடு 95 சதவீதமும், நாகப்பட்டினம் 84 சதவீதமும், திண்டுக்கல் 69 சதவீதமும், கோயம்புத்தூரில் 58 சதவீதமும் மழை அளவு பதிவாகி உள்ளது.

சென்னையில் 49% கூடுதல்
சென்னை மாவட்டத்தில் இதுவரை சராசரியை விட 49 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட குறைவாக பெய்துள்ளது.

குறைவான மழை அளவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 சதவீதம் குறைவாக மழை இதுவரை பெய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 34 சதவீதம் மழை பெய்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில்
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அபரிதமான மழை பெய்துள்ளது. திருச்சியில் மிக குறைவாக மழை பதிவாகி உள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக்கடலில் அடுத்தடுத்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதிய புயல்
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்த மண்டலமாக (புயல்) மாறும் வாய்ப்பு உள்ளது. வருகிற 6 அல்லது 7ஆம் தேதி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை நீடிக்கும்
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications