கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக் கடல் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலவிய காற்றழுத்தத் தாழ்வு நிலை, வியாழக்கிழமை வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், காரைக்கால் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வியாழக்கிழமை கூறியதாவது: வங்கக் கடல் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி உள்ளது. தற்போது, இலங்கை, வட தமிழகம் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம். வட கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் பலத்த, மிக பலத்த மழை இருக்கும்.
மிக பலத்த மழை எச்சரிக்கை: கணினி சார்ந்த கணிப்புகள்படி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களில், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புண்டு. தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை இருக்கும். அதாவது, அந்தப் பகுதிகளில் 250 மி.மீட்டர் அளவுக்கும் மேல் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் விட்டு விட்டு மழை இருக்கும். நகரில் ஓரிரு முறை பலத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
தென்தமிழகம், புதுச்சேரி, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு ஆகிய திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், வங்கக் கடலில் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
3 நாள்களுக்கு பலத்த மழை: இந்த நிகழ்வின் காரணமாக, அடுத்து வரும் 3 நாள்களுக்கு நல்ல மழை இருக்கும்.
கடலோர மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்களுக்கு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை இருக்கும் என்றார் எஸ்.ஆர்.ரமணன்
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications