தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்... வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நீலகிரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிரட்டி வரும் நிலையில் அதன் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் இருந்து வருகிறது.

இதனால் நீலகிரி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் தென் கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக தேவாலாவில் 11 சென்டிமீட்டர், சின்னகல்லாரில் 10 சென்டிமீட்டர் மற்றும வால்பாறையில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications