கனமழை: சென்னை உட்பட 5 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை!!
சென்னை: விடாத கனமழை தொடர்வதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டுவதால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாகி மிதந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள் திறக்கப்படுள்ளதால் எங்கெங்கும் மழை வெள்ளக்காடுதான்...
#Chennairains @chennaiweather #GST #OlympiaTechPark pic.twitter.com/gmO6KUCB8Q
— Prabhu Krishna (@rprabhuvk) December 1, 2015 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகரம் ஏரி திறக்கப்பட்டுள்ளது; மேலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது; புழல் ஏரி உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியான சென்னை புறநகர் முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது.
GST road towards CGL in vandalur blocked due to flooding #chennairains @ChennaiRains @chennaiweather @TheHindu pic.twitter.com/3EmmOaSrx5
— J@ved® (@iamjaveedkhan) December 1, 2015 இதனைத் தொடர்ந்து சென்னை , காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் பள்ளி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
#Chennairains HELPLINE👇🏻plz RT @ihansika @ashwinravi99 @actorvijay @ARMurugadoss @arrahman @trishtrashers pic.twitter.com/2AfQO0W12F
— Venkat Praveen (@venkatpraveenR) December 1, 2015 ஏற்கனவே பல வாரங்களாக கனமழையால் இந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய புதிய பேய்மழையால் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மூடப்படும் நிலைமை உருவாகி உள்ளது.
புதுவையில்...
புதுச்சேரியிலும் மழை வெளுத்துவாங்குவதால் புதுவை மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications