திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மணி நேரமாக கொட்டிய பலத்த மழை.. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 6 மணி நேரமாக கொட்டிய கனமழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
திருவண்ணாமலை: போளூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த 6 மணி நேரமாக இடைவிடாமல் பெய்த பலத்த மழையால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
கன்னியாகுமரி அருகே நேற்று மையம் கொண்டிருந்த ஓகி புயலால் தென்தமிழகத்தில் கனமழை பெய்தது. இதன் தாக்கம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இருந்தது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

மக்கள் முடக்கம்
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் பிற்பகலில் இருந்து நல்ல மழை பெய்தது. கடந்த 6 மணி நேரமாக கொட்டிய மழையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மக்கள் அவதி
பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த மழையால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

திருவாரூரிலும் மழை
இதேபோல் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தை நெருங்கும்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்றும் 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த நான்கு நாட்களில் அது வடதமிழகத்தை நெருங்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துதிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications