சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மழை வெளுக்குமாம்.. வார்னிங் கொடுக்கும் நார்வே வானிலை மையம்!
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video

சென்னை: ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியதுமே தீவிரம் காட்டிய பருவமழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கியது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின.

வங்கக்கடலின் தென் பகுதியில்
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலை ஒட்டியுள்ள தென் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் கனமழை
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளுக்கும்
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சனிக்ககிழமை இரவு முதல் ஞாயிற்றுக் கிழமை காலை வரை லேசான பின்னர் கனமழையும் பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.

இரவில் கனமழை
இதைத்தொடர்ந்து பிற்பகலில் லேசான மழையும் இரவு நேரத்தில் கனமழையும் பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்யும் என்றும நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது.

எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
ஏற்கனவே பல முறை நார்வே நாட்டு வானிலை மைய கணிப்புகள் பலித்துள்ளது. இதனால் இந்த முறையும் சொன்னது போல் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications