சென்னையில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும்... சொல்கிறது நார்வே வானிலை மையம்
சென்னையில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: இன்றும் நாளையும் விட்டு விட்டு பலத்த மழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சனிக்கிழமை இரவு முதலே சென்னையில் மழை கொட்டும் என நார்வே மற்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்தன.

கடலில் பெய்த மழை
அதற்கேற்றார் போலவே சென்னை பகுதியில் கடும் மேக கூட்டம் சூழ்ந்திருந்தது. ஆனால் சனிக்கிழமை இரவு முதலே சென்னையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் கடலிலேயே மழை கொட்டி தீர்த்துவிட்டதாக கூறப்பட்டது.

இடிமின்னலுடன் கனமழை
பெரும்பாலான மழை கடலில் பெய்ததால் சென்னை ஒரு நல்ல மழை இழந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடிமின்னலுடன் கனமழை கொட்டியது.

இன்று கனமழை பெய்யும்
விடிய விடிய பெய்த மழையால் சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று விட்டு விட்டு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது.

நாளையும் கனமழை
நாளையும் இதேபோல் கனமழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. புதன் கிழமை முதல் சென்னையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications