செங்கல்பட்டு தடுமாறுது.. பெருங்களத்தூர் டூ செம்பாக்கம் பிஸி.. அதென்ன கிரேனில் தொங்குது? அட அண்ணாமலை
செங்கல்பட்டு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சிக்கு ஆதரவும், எதிர்ப்பும் என இருதரப்பு விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் பெற்றுக் கொண்டிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம், காமராஜபுரம் பஸ் ஸ்டாண்டு அருகே "என் மண் என் மக்கள் யாத்திரை" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

வரவேற்பு: அப்போது, அண்ணாமலையை வரவேற்பதற்காக, கிரேன் ஒன்றில் பிரமாண்ட மாலையை அவருக்கு அணிவிக்க நிர்வாகிகள் தயாராக இருந்தனர்.. ஆனால் போலீசார் அதனை தடுத்து நிறுத்திவிட்டனர். அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்காக தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலைகள் முழுவதும் சென்டர் மீடியனில் பாஜக கொடிக்கம்பங்கள் நட்டுவைக்கப்பட்டிருந்தன.
சாலையின் இரு ஓரங்களிலும், பிளக்ஸ் பேனர்கள், எல்இடி விளக்குகள் என முழுக்க முழுக்க அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.. இதன் காரணமாக, பெருங்களத்தூர் முதல் செம்பாக்கம் பகுதி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணாமலை: நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, கூட்டத்தில் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்ற பாஜக தொண்டரிடம் இருந்து பர்ஸ் ஒன்று பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுவிட்டதாம். அதேபோல, நிகழ்ச்சி முடிந்து அண்ணாமலை கிளம்பி சென்றபோது, அந்த பகுதிகளில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதில், மக்கள் நெரிசலில் சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும், அண்ணாமலை சென்ற கான்வாய் வாகனங்களில் ஒன்று, அங்கிருந்த தொண்டரின் கால் மீது ஏறி இறங்கியதில், அவர் வலி தாங்க முடியாமல் கதறியிருக்கிறார்.. போக்குவரத்து நெரிசலால் டிரைவர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தாராம். அண்ணாமலை கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக ஆட்சி: அதேபோல, அதிமுக ஆதரவு சேனல் ஒன்றில், அண்ணாமலை மீதான நடைபயணம் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில், "பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை கொடுக்கும் என்று அண்ணாமலை சொல்லி வருகிறார். ஆனால், குஜராத்தில், 20 ஆண்டு காலமாக, பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், அரசு வேலையில்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருவதாக செய்தி வெளியாகி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில், இரண்டரை லட்சத்து 38 ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பத்தும், அதில், வெறும் 32 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைத்துள்ளது அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
வேலைவாய்ப்பு: 20 ஆண்டுகளாக ஆளும் குஜராத்திலேயே வேலைவாய்ப்புகளை கொடுக்காதவர்கள், தமிழகத்தில் அனைவருக்கும் வேலை என்று பொய் வாக்குறுதிகளை தருவதாக அள்ளி வீசுவதாக விமர்சனம் எழுந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், அண்ணாமலையின் நடைபயணம், பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.. மாவட்டந்தோறும், சாலையின் வழியெங்கும் அண்ணாமலைக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளித்திருக்கிறார்கள்..
ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அண்ணாமலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.
நடைபயணம்: இந்த யாத்திரை, வெறுமனே, ஒரு நடைபயணமாக முடிந்துவிடாமல், செல்லும் இடங்களிலெல்லாம் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார் அண்ணாமலை. மத்திய அரசின் திட்டங்களையும், அந்த திட்டங்களினால் கிடைத்த பலன்களையும், மக்களிடம் நேரடியாகவே சொல்லியதுடன், திமுக அரசின் குறைகளையும் மறக்காமல், லிஸ்ட் போட்டு சொன்னார் அண்ணாமலை.
மொத்தத்தில், ஆதரவும், எதிர்ப்பும் என இரு விதமான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அண்ணாமலையின் நடைபயணம் ஒருவித தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியிருப்பதாகவே கருதப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications