புற்றுநோயால் அவதிப்படும் 8 வயது குழந்தை.. எபனேசரை காக்க உதவிக் கரம் நீட்டுங்கள்
சென்னை: புற்றுநோயால் அவதிப்பட்டு 8 வயதில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையான எபனேசரை காக்க உதவிக் கரம் நீட்டுங்கள்.
நான் ஒவ்வொரு முறையும் எபனேசருடன் சேர்ந்து கால்பந்து விளையாடும் காலங்கள் தான் எனக்கு நியாபகத்துக்கு வருகிறது. அவனுடைய அழகிய புன்சிரிப்பு, சந்தோஷம் எல்லாத்தையும் நான் இப்பொழுது நினைத்து ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். அவன் எப்பொழுதும் அப்பா அப்பா என்று பேசிக் கொண்டு சண்டையிட்டு கொண்டே இருப்பான்.

இப்பொழுது எல்லாம் அவன் குரல் கேட்பதில்லை. மறுபடியும் என்னுடன் பேசி சண்டையிட அவன் வர வேண்டும். என் மனதில் இருக்கும் வேதனையை எப்படியாவது அவன் திரும்ப வந்து களைய வேண்டும். அவனுக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்ததும் எங்களுடைய வாழ்க்கையே ஒரு கட்டத்தில் திருப்பி போடப்பட்டு விட்டது. அவனை மீட்க எங்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி தேவைப்படுகிறது. கதிரியக்க (லேசர்) சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே அவனை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறுவிட்டனர்.
என் பெயர் ஸ்டீபன், நான் எபனேசரின் தந்தை. நாங்கள் சென்னையில் வசித்து வருகிறோம். என்னுடைய 8 வயது மகன் போண்டைன் க்ளியோமா என்ற மூளை புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றான். இதை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். இருப்பினும் அவனுடைய வாழ்க்கையை நீட்டிக்க அவர்கள் இப்பொழுது போராடி வருகின்றனர். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் அவனுக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. நாங்கள் அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றோம். அவர்கள் நோயின் தாக்கத்தை கண்டறிய மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார்கள்.

அவனை கூப்பிட்டு கொண்டு நிறைய மருத்துவமனைகள் ஏறி இறங்கினோம். ஹிந்து மிஷன் ஹாஸ்பிடல், கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மற்றும் எஸ்ஆர்எம் மருத்துவமனை என்று எல்லா மருத்துவமனைக்கும் ஏறி இறங்கினோம். இறுதியாக எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அவனுக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டது. அப்பொழுது தான் அவனுக்கு மூளை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறினர். தற்போது கதிரியக்க சிகிச்சைக்காக நாங்கள் அப்பல்லோ மருத்துவமனையை நாடி வந்துள்ளோம்.
அவனது இடது கால், அவனுடைய பேச்சு எல்லாம் இப்பொழுது செயலிழந்து விட்டது. என்னுடன் ஓடி ஆடி விளையாடிய அவன் இப்பொழுது சுய நினைவை இழந்து படுத்த படுக்கையாகி விட்டான். எந்த அசைவும் இல்லாமல் செயலற்று அவன் கிடப்பதை பார்த்தாலே அழுது விடுகிறேன்.
உடனடியாக நாங்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்றோம். அவன் மூச்சு விடக்கூட திணறிக் கொண்டு இருந்தான். 24 மணி நேரமும் அவனுக்கு செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டது.

சில வாரங்களில் அவனது உடல்நிலை முன்னேறி 10 நாட்களில் நாங்கள் வீட்டிற்கு திரும்பினோம். ஆனால் மறுபடியும் இந்த நோய் அவனை விடவில்லை. அவனால் அவன் கண்களைக் கூட திறக்க முடியாமல் போனது. இப்பொழுது அவனை காஞ்சி காமகோடி மருத்துவ மனையில் சேர்த்துள்ளோம். அவனுக்கு உடனடியாக கதிரியக்க சிகிச்சை செய்து வருகின்றனர்.
நாங்கள் இருவரும் சேர்ந்து அவனை பார்த்து கொள்ள வேண்டியது இருப்பதால் எங்களால் வேலைக்கு கூட போக முடியவில்லை. இதனால் குடும்பத்திற்கு என்று எந்த வருமானமும் வருவதில்லை. தங்கியிருக்கும் மருத்துவ மனையிலிருந்து எங்கள் வீடும் மிகுந்த தொலைவில் உள்ளது. பயண செலவை கூட சமாளிக்க முடியாமல் அல்லாடி வருகிறோம். மூன்று மாதங்களாக என்னால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை. நான் ஒரு ஆட்டோ மொபைல் கம்பெனியில் மேனேஜராகப் பணிபுரிகிறேன். எனது மனைவி குடும்பத்தை கவனித்து கொள்கிறாள்.

என் மகன் இருக்கும் நிலையில் அவனை விட்டு என்னால் சிறிதளவு கூட நகர முடியவில்லை. எங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து அவனின் சிகச்சைகாக 11 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளோம். அவனின் சிகிச்சைக்காக இன்னமும் 8 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. எங்களுக்கு உதவி செய்ய வேறு யாருமில்லை. எங்கள் மகனை காப்பாற்ற உங்களை நாடி வந்துள்ளேன். எப்பொழுதும் சந்தோஷமாக துள்ளித் திரிந்த என் மகனை காக்க எனக்கு கை கொடுங்கள். ஒரு தந்தையின் கவலைக்கு உதவிக் கரம் நீட்டுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியும் என் மகனின் உயிரை வலுவாக்கும்.
எபனேசரை காக்க மனித நேயத்துடன் ஒன்றுபடுவோம். அவனை காப்பாற்ற கடவுளுடன் சேர்ந்து நாமும் கை கொடுப்போம். அவனுடைய வாழ்க்கையை நீட்டிக்க உதவிக் கரம் நீட்டுங்கள். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இதுவும் நீங்கள் செய்யும் சிறிய உதவியே.
உயிர் காக்க உதவி செய்வோம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications