இரத்த புற்றுநோயால் அவதிப்படும் பிஞ்சுக் குழந்தை.. நீங்கள் நினைத்தால் உதவலாம்!
ஒரு வேளைக் கூட உணவு சாப்பிடாமல் தங்கள் குழந்தையின் இரத்த புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகப் போராடி வரும் இந்த பெற்றோருக்கு முடிந்தால் உதவுங்கள்.
சென்னை: ஒரு வேளைக் கூட உணவு சாப்பிடாமல் தங்கள் குழந்தையின் இரத்த புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகப் போராடி வரும் இந்த பெற்றோருக்கு முடிந்தால் உதவுங்கள்.
ஒரு குழந்தை இவ்வுலகில் முழுமையாக வாழ்வதற்குள் தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் நிலை எப்படி உருவாகுகிறது? விருப்பமாக சாப்பிட்டு, ஓடியாடி விளையாடி கனவுகளை ஆசைகளை கண்ணில் சுமந்து கொண்டு நம்மை ஏறிட்டு பார்க்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியாது இந்த உலகத்தில் உயிர் என்பது நிரந்தரமல்ல என்று? அப்படித்தான் எதுவும் அறியாத வயதில் இந்த சின்னஞ்சிறு குழந்தை தன் வாழ்க்கையைக் காப்பாற்ற போராடி வருகிறது.
என் ஒன்பது வயது மகன் தான் மணி கிருஷ்ணா, ஒரு மாதத்திற்கு முன்பு தீவிர வலியால் துடித்தான். அவனை மருத்துவமனையில் நாங்கள் அனுமதித்தோம். அந்த வலியை அவனது முகத்தில் காண முடிந்தது. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவன் பேசக்கூட முடியவில்லை. இந்த உடல் பாதிப்பு அவனை உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாகவும் அவனை பாதித்து வருகிறது. அவனுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரியாது. அவன் மனதளவில் படும் வேதனையை எங்களால் தாங்க முடியாது அதனால் அவனிடமிருந்து மறைத்து வருகிறோம்.
என் பெயர் ஜெல்லா ரவிக்குமார், நான் மணி கிருஷ்ணாவின் தந்தை. எனது மனைவி மற்றும் என்னுடைய வருமானமும் சேர்ந்து மாதம் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறோம். நான் விமான நிலைய மைதான ஊழியராக வேலை பார்க்கிறேன். என் மனைவி புடவைகள் விற்று கொஞ்சம் பணம் சம்பாதித்து வருகிறாள்.
போன மாதம் கிருஷ்ணா தீடீரென்று வயிற்று வலியால் கத்தினான். மூன்று நாட்களாக தொடர்ச்சியான இருமலுடன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தான். மூன்றாவது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. அவனால் மூச்சு கூட விட முடியவில்லை. திணற ஆரம்பித்து விட்டான். உடனே அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம். அவனுக்கு பல பரிசோதனைகள் செய்த பிறகு நுரையீரல் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது உடனே அதை நீக்க வேண்டும் என்றனர் மருத்துவர்கள். அவனது நுரையீரலில் இருந்த 4 லிட்டர் தண்ணீரை வெளியேற்றி அதை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது தான் அவனுக்கு இரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இந்த நோயை குணப்படுத்த உடனே கீமோதெரபி செய்ய வேண்டும், அதற்கு 15 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு அதிகம் செலவாகும் என்பதால் நான் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி செலவழித்து வருகிறேன். சில நேரம் மருத்து வாங்க கூட காசு இருக்காது. அதனால் நாங்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அந்த பணத்தை மருந்துக்காக செலவழித்து வருகிறோம். அவனுக்கு சரியான நேரத்தில் சிகச்சை கொடுக்கப்பட்டால் அவன் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள். ஆனால் இந்த சிகச்சைக்கு என்னிடம் போதிய பணமில்லை. நீங்கள் நினைத்தால் எனக்கு உதவி செய்யலாம். என் குழந்தை மறுபடியும் சிரித்து விளையாட வேண்டும். அவனது வேதனையை குறைக்க எனக்கு உதவுங்கள். இந்த தந்தையின் போராட்டத்தில் உங்கள் உதவிக் கையும் கை கொடுக்கட்டும்.
தயவு செய்து உயிருக்கு போராடும் இந்த சின்னஞ் சிறு குழந்தைக்கு உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள். ஒரு பொற்றோரின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த உங்கள் சிறு உதவி உதவட்டும். உங்கள் சிறு உதவி ஒரு குழந்தையை நீடுழி வாழ வைக்கப் போகிறது என்பதை மறவாதீர்கள்.
உயிர் காக்க உதவி செய்வோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்
















Click it and Unblock the Notifications