புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம பெண் வாயில் சாராயத்தை ஊற்றி பலாத்காரம் செய்த கயவர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக கடலுக்குப் போன சமயத்தில், இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஹேமலதா எப்படி பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றபட்ட ஹேமலதா தனது சகோதரிகள் மற்றும் பெற்றோருடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து அனைவரும் காலாப்பட்டு கடற்கரைக்குச் சென்று அங்கு கடலில் குதித்துள்ளனர்.

அப்போது ஹேமலதா மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளார். அப்போது அங்கு நண்டு பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலை முயற்சியில் ஹேமலதாவின் 2 சகோதரிகளும், தாயாரும் உயிரிழந்தனர். ஹேமலதா, அவரது தந்தை மற்றும் இரு சகோதரிகள் மட்டும் உயிர் பிழைத்தனர்.
உயிர் பிழைத்த ஹேமலதா தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் விஜயக்குமார், ராஜு ஆகிய இருவர் சிக்கினர். இவர்கள் தாங்கள் ஹேமலதாவை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒத்துக் கொண்டனர்.
விசாரணையின்போது, கடற்கரையில் மயங்கி கிடந்த ஹேமலதாவின் வாயில் சாராயத்தை ஊற்றி பலாத்காரம் செய்ததாக இவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஹேமலதாவிடம் இருந்து இவர்கள் திருடிய மோதிரத்தையும் போலீசார் கைப்பற்றினர். இருவரும் தற்போது புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications