ஆர்கே நகரை ஆசை காட்டி மொத்தமாக ஃபீஸ் பிடுங்கப்பட்ட தினகரன்!

By: Rajiv
Subscribe to Oneindia Tamil

ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிட்டதும் மணல் மாஃபியா வைகுண்டராஜனை சேர்த்துக் கொண்டதும்தான் தினகரனை புதைகுழியில் தள்ளியிருக்கின்றது.

தமிழகத்தை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வந்த மத்திய அரசு சசிகலா அதிகாரத்தை நோக்கி காலெடுத்து வைத்ததுமே தன் வேலையைத் தொடங்கியது.

Here are the reasons for the fall of TTV Dinakaran

அதுவரை இருந்த இடமே தெரியாமல் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கு தூசி தட்டப்பட்டு, உடனே தீர்ப்பும் அறிவிக்கப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார் சசிகலா. ஆர்கே நகரில் போட்டியிட வேண்டாம் என்று தினகரனிடம் சொல்லிப் பார்த்தார். ஆனால் தினகரன் கேட்கவில்லை. முதல்வர் ஆசையில் போட்டியிட்டார். இப்போது சிறைக்கு செல்லக் காத்திருக்கிறார்.

ஆர்கே நகரில் தினகரன் போட்டியிட்டதிலேயே கடுமையான கோபத்தில் இருந்த மத்திய அரசுக்கு தினகரன் செய்த செலவு இன்னும் வெறியேற்றியது. தினகரன் பணத்தில் திளைக்க யார் காரணம் என்று தோண்டினால் மணல் மாஃபியா வைகுண்டராஜன் வந்தார். சில நாட்களுக்கு முன்னர்தான் வைகுண்டராஜன் தினகரனைச் சந்தித்திருந்தார்.

முக்கிய பிரமுகர்களை அழைத்து வரும் பொறுப்பும் ஆர்கே நகர் தேர்தல் செலவில் பெரும்பங்கும் வைகுண்டராஜனிடம் தரப்பட்டது.

இப்போது மத்திய அரசின் பார்வை வைகுண்டராஜன் மீதும் விழுந்துள்ளது. வைகுண்டராஜன் மூலம் தினகரனுக்கு ஆதரவளிக்க வந்த சரத்குமார் மீதும் திரும்பியது. தினகரன் மொத்தமாக ஃபீஸ் பிடுங்கப்பட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
How TTV Dinakaran lose his grip in party and caught by central investication agencies? Here are few reasons.
Please Wait while comments are loading...