சென்னை சிறுவன் தில்சனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரிக்கு 15 நாள் லீவ்
சென்னை: சிறுவன் தில்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரி ராமராஜூக்கு உயர்நீதிமன்றம் 15 நாள் விடுமுறை அளித்துள்ளது.
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தவர் ராமராஜ் (58) ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டின் அருகே குடிசைப்பகுதி உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு இங்கு வசிக்கும் சிறுவர்கள் ராணுவ குடியிருப்பின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வாதாங்கொட்டை பறித்தனர். அவர்களை விரட்ட ராமராஜ் துப்பாக்கியால் சுட்ட போது 11 வயது சிறுவன் தில்சன் குண்டு பாய்ந்து பலியானான்.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் ராமராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக அவர் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், இரண்டு கண்களிலும் புரை வளர்ந்து, 60 சதவீதம் பார்வை பாதித்த நிலையில் இருக்கும் தனது கணவர் ராமராஜூக்கு உடனடியாக கண் ஆபரேஷன் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அவரை ஒரு மாத விடுமுறையில் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், தன்னால் அடிக்கடி சென்னைக்கு வந்து புழல் சிறையில் இருக்கும் கணவரை சந்திக்க சிரமாக இருப்பதாகவும் எனவே,அவரை மதுரை சிறைக்கு மாற்றும்படி உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவின் மீது நேற்று விசாரணை நடத்திய நீதிபதிகள் அருணா ஜெகதீசன் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், கண் பார்வை பாதிக்கப்பட்ட ராமராஜுவுக்கு புரை நீக்கும் ஆபரேஷன் செய்ய வசதியாக 15 நாட்கள் விடுமுறையில் அனுப்புமாறு புழல் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
முழு பாதுகாப்புடன் அவரை அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், மதுரை சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறை துறை அதிகாரிகளை அணுகுமாறு மனுதாரரை அறிவுறுத்தியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications