ப்ளூவேல்.. தானாக முன்வந்து விசாரிக்கிறது ஹைகோர்ட் மதுரை கிளை
Subscribe to Oneindia Tamil
மதுரை: ப்ளூவேல் கேம் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கிறது ஹைகோர்ட் மதுரை கிளை.
மதுரை அருகே கல்லூரி மாணவர் விக்னேஷ் நேற்று முன்தினம் ப்ளூகேம் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஹைகோர்ட் மதுரை கிளை ப்ளூகேம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. 4ம் தேதி கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. முன்னதாக ப்ளூகேம் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஹைகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் முன்பாக முறையீடு செய்தார். ஆனால் ஹைகோர்ட் தானாகவே முன்வந்து விசாரிக்க உள்ளதாக அவரிடம் தெரிிவித்தது.













Click it and Unblock the Notifications