ஆட்டோ கட்டண நிர்ணயம்: 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
ஆட்டோ கட்டணத்தை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தைத் மாற்றி அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் லோகநாதன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆட்டோ மீட்டர் தொடர்பான நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்களை ஆட்டோக்களில் எழுதி வைக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளித்தால், குறுஞ்செய்தி மூலம் பதிலளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று மாற்றி அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஆட்டோ கட்டணத்தை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-இல் கடைசியாக ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இரண்டு ஆண்டு கால அவகாசம் முடிந்து விட்டதால், கட்டணங்களை உயர்த்தியோ, குறைத்தோ மாற்றியமைப்பது குறித்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications