இந்தியர்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தும் ஸ்டைலே தனி.. சர்வே ரிசல்ட்டை பாருங்க

இந்தியாவில் மக்கள் செல்போன் மூலமே அதிகமாக இணையம் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்தியர்கள் இன்டர்நெட்டை எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?- வீடியோ

    சென்னை: இந்தியாவில் மக்கள் செல்போன் மூலமே அதிகமாக இணையம் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. இணையம் மற்றும் மொபைல் பயன்பாடு குறித்த இந்திய அமைப்பும், காந்தார் ஐஎம்ஆர்பி என்ற அமைப்பும் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

    அறிக்கையின்படி இணையதள பயன்பாடு 500 மில்லியனாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 35 சதவிகித மக்கள் தற்போது தொடர்ச்சியாக இணையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    அதேபோல் இணையத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்றும் இதில் விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.

    எப்படி பயன்படுத்துகிறார்கள்

    எப்படி பயன்படுத்துகிறார்கள்

    அதிக மக்கள் மொபைல் மூலமே இணையத்தை பயன்படுத்துகிறார்கள். நகரங்களில் 86 சதவிகிதமும், கிராமங்களில் 87 சதவிகிதம் பேரும் மொபைல் மூலம் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். 12 சதவிகிதம் பேர் இரண்டு பகுதியிலும் லேப்டாப் மூலம் பயன்படுத்துகிறார்கள். 1 சதவிகிதம் மட்டுமே போன் மூலம் பயன்படுத்துகிறார்கள்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    சென்ற வருடம் இதன் மதிப்பு 77 சதவிகிதமாக இருந்தது. மொபைல் வேகம் அதிகமாக இருப்பதால் இதன் எண்ணிக்கை அதிகம் ஆகியுள்ளது. மேலும் அதேபோல் சரியான பார்ட்பேண்ட் வசதி இல்லாததால் பலரும் மொபைல் பயன்படுத்துகிறார்கள்.

    எங்கே

    எங்கே

    அதேபோல் 87 சதவிகிதம் பேர் வீட்டில் இருந்து தான் இணையம் பயன்படுத்துகிறார்கள். 15 சதவிகிதம் நண்பர்கள் வீடு, 12 சதவிகிதம் கல்லூரி, 12 சதவிகிதம் நடந்து கொண்டே, 11 சதவிகிதம் நெட் செண்டர், 11 சதவிகிதம் ஆபிஸ், மற்ற இடங்களில் இருந்தது 6 சதவிகிதம் பேரும் இணையம் பயன்படுத்துகிறார்கள்.

    தேவை

    தேவை

    நகரங்களில் இணையம் பயன்டுத்த 47 சதவிகிதம் பேர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அதேபோல் கிராமங்களில் 55 சதவிகிதம் போதிய விழுப்புணர்வு இல்லாமல் உள்ளனர். 10லிருந்து 14 சதவிகிதம் பேர் இணையம் பயன்படுத்துவதற்காக உபகரணம் இல்லை என்றுள்ளனர். 26 சதவிகிதம் பேர் இணையமே தேவை இல்லை என்றுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+