For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் பால் விலை உயர்வு... முகவர்கள் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் மே 1 முதல் முதல் பால் விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் உயர்த்துவதாக சுற்றறிக்கை மூலம் பால் முகவர்களுக்கு இன்று தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வுக்கு முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது. இந்த விலை உயர்வு என்பது கடந்த 6 மாதத்தில் இது நான்காவது முறையாகும். சுற்றறிக்கை மூலம் இது முகவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தனியார் பால் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வுக்கு ''தமிழ் நாடு பால் முகவர்கள் நல சங்கம்'' கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், பால் விலை உயர்வு விசயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எங்களது சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

English summary
A private milk producer, based in Hyderabad, raised the price of milk by Rs 2 a litre a couple of days ago, increasing the cost of one litre of milk to Rs 26. Milk distributors in the city say the price rise could be because of a shortage in the supply of milk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X