For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார் சிலையை உடைக்கப்போவதாக கூறிய எச் ராஜாவுக்கு அர்ஜூன் சம்பத் பகிரங்க ஆதரவு!

பெரியார் சிலையை உடைக்கப்போவதாக கூறிய எச் ராஜாவுக்கு அர்ஜூன் சம்பத் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜாவின் கருத்தால் வெடித்த சர்ச்சை- வீடியோ

    சென்னை: பெரியார் சிலையை உடைக்கப்போவதாக கூறிய எச் ராஜாவுக்கு அர்ஜூன் சம்பத் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

    பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அவ்வப்போது ஏதாவது சர்ச்சை கருத்தை கூறி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    எச் ராஜாவின் சர்ச்சைக் கருத்துக்காக அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட எச் ராஜா நாளை தமிழகத்தில் பெரியார் சிலை என தெரிவித்துள்ளார்.

    வன்முறையை தூண்டாது

    வன்முறையை தூண்டாது

    பெரியார் சிலை உடைக்கப்படும் என எச் ராஜா கூறியதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார். எச்.ராஜா கருத்து வன்முறையை தூண்டாது என்றும் அர்ஜுன் சம்பத் டிவி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    கோவில்கள் முன்பாக

    கோவில்கள் முன்பாக


    கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என பெரியார் கூறியதை கோயில் முன்பாக வைக்கிறார்கள் என்று கூறிய அர்ஜுன் சம்பத்,
    கோயில்கள் முன்பாக உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய தலைநகரில்

    ரஷ்ய தலைநகரில்

    ரஷ்ய தலைநகரத்திலேயே லெனின் சிலையை அகற்றினர் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். சிலையை வைத்து அரசியல் செய்தது திராவிட இயக்கங்கள்தான் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

    பிள்ளையார் சிலையை உடைத்தவர்

    பிள்ளையார் சிலையை உடைத்தவர்

    பிள்ளையார் சிலையை உடைத்தவர் சிலையை நாங்கள் பொது இடத்தில் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். எச் ராஜாவின் ஃபேஸ்புக் பதிவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு அர்ஜுன் சம்பத் ஆதரவு தெரிவித்திருப்பது எண்ணெய்யை ஊற்றியுள்ளது.

    English summary
    Hindu Makkal katchi Arjun Sambath supports H Raja. H Raja has posted in his facebook page that Periyar statue will demilish in future.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X