கோவிலுக்கு மாலை அணிந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு: பள்ளியை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு மாலை அணிந்த மாணவியை பள்ளியில் அனுமதிக்கவில்லை என்று இந்து முன்னணியினர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் ஸ்வீட்லி. நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழாவை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்.

அம்மாணவியை வகுப்பு ஆசிரியர் ஜடா, தலைமை ஆசிரியை சந்திரவதனா ஆகியோர் கோவில் விழாவுக்கு சென்று வந்தபின் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் அதுவரை பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தனது குடும்பத்தார் மற்றும் இந்து முன்னணியின் துணை தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்று தாசில்தாரிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியை மாலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் துணை தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாசில்தார் வெங்கடாசலம், சாத்தான்குளம் டிஎஸ்பி கனகராஜ் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினர். இதில் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வரலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications