கிணற்றில் தவறி விழுந்த குதிரை- தீயணைப்புத்துறையினர் மீட்பு!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: குமாரபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த குதிரையை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜேந்திரன். இவர் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். இந்நிலையில் குதிரையானது அருகிலுள்ள இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தது.
மேய்ச்சலில் மும்முரத்தில், குதிரை அப்பகுதியில் உள்ள 100 அடி கிணற்றில் தவறி விழுந்தது. அந்த கிணற்றில் 15 அடி வரை தண்ணீர் இருந்தது.
கிராமமக்கள் எவ்வளவோ முயற்சித்தும் குதிரையை மீட்க முடியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் கிடந்த குதிரையை மீட்டனர்.
பிறகு குதிரைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஜோசப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications