மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்

கோவையில் விடுதி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தேடப்பட்ட வார்டன் புனிதா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தவறான பாதைக்கு மாணவிகளை அழைத்த கோவை விடுதி வார்டன் சரண்

    கோவை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த விடுதி வார்டன் புனிதா இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    கோவை பாலரங்கநாதபுரம் ஜீவா தெருவில் தர்ஷனா என்ற பெண்கள் விடுதி நடத்தப்பட்டு வந்தது. 4 மாடிகளைக் கொண்ட இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐடியில் வேலை செய்யும் பெண்கள் தங்கிவந்தனர்.

    Hostel warden Punitha surrender who called college girls into prostitution in Kovai

    இந்நிலையில் கடந்த வாரம் அந்த விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகளை விடுதியின் உரிமையாளர் ஜெகநாதனுடன் உல்லாசமாக இருப்பதற்கு வார்டன் புனிதா அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறினர். அதன் பிறகு வார்டன் புனிதா மாணவிகளை சந்தித்து இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

    புனிதாவின் கொலை மிரட்டல் குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்ததால், மாணவிகளின் பெற்றோர்கள் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் வார்டன் புனிதா மீது புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஜெகநாதனையும் புனிதாவையும் தேடி வந்தனர்.

    Hostel warden Punitha surrender who called college girls into prostitution in Kovai

    இதைத்தொடர்ந்து, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் குற்றாலம் அருகே மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய புனிதாவை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்நிலையில், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விடுதி வார்டன் புனிதா இன்று கோவை ஜெ.எம். 6 நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரணடைந்த புனிதாவை நீதிபதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+