பயிற்சி மருத்துவர்கள் 3 வது நாளாக போராட்டம்: நோயாளிகள் பாதிப்பு

குமரி மாவட்டம் விலவங்கோடு ஒற்றாமரத்தை சேர்ந்தவர் பொன்சாம். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கங்கைகொண்டான் அருகே வந்த போது அதே பஸ்சில் பயணம் செய்த 3 பேரின் நகைகளை பொன்சாம் பறித்தார். இது தொடர்பாக கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி பொன்சாமை கைது செய்தனர்.
அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை நடந்தபோது பயிற்சி மருத்துவர் சீனிவாசனை பொன்சாம் தாக்கினார். இதனை தடுக்க முயன்ற மேலும் சில பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து பொன்சாமை போலீசார் பாளை சிறையில் அடைத்தனர். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் கடந்த 25ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இது முன்றாவது நாளாக தொடர்ந்தது.
மருத்துவமனை வாளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் பாதுகாப்பு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் அனுமதி சீட்டு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. மருத்துவமனை டீன் சவுந்திர ராஜன் மாணவ பிரிதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications